ஆன்லைன் மூலம் லோன் தருவதாக கூறி கொள்ளை!! உஷார்!
சென்னையில் ஆன்லைன் மூலம் லோன் தருவதாக கூறி நூதன முறையில் பணம் ஏமாற்றிய நபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை மதுரவாயல் அடுத்த செட்டியார் அகரம் தெருவை சேர்ந்த நாகராஜன், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் இவர் செல்போன் எண்ணிற்கு கடந்த இரு மாதங்களுக்கு முன்பு பஜாஜ் பைனான்ஸ் மூலமாக லோன் தருவதாக ப்ரியா என்ற பெண் ஒருவர் தொலைபேசி வாயிலாக பேசி 6 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும் என அக்கவுண்ட் நம்பரையும் அளித்துள்ளார்.
தனக்கு அவசரமாக லோன் வேண்டும் என்பதால், நாகராஜனும் 6 ஆயிரம் ரூபாயை அவர்களுக்கு செலுத்தியுள்ளார். ஆனால் பணம் செலுத்தி, இரண்டு மாதங்களாகியும் அவர்கள் எந்த வித லோன் சேவையும் தரவில்லை என கூறப்படுகிறது.
மேலும் தான் ஏமாந்திருப்பதை உணர்ந்த நாகராஜன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், திருவண்ணாமலை மாவட்டம் சாந்திமேடு பகுதியை சேர்ந்த பரத் என்ற நபர் இதுபோன்று லோன் தருவதாக கூறி தொடர்ந்து ஏமாற்று வேலைகளில் ஈடுபட்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து அவனை கைது செய்த போலீசார்
சிறையில் அடைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.