ஏங்க..தப்ப உங்கமேல வெச்சிக்கிட்டு மத்தவங்கள குறை சொன்னா எப்படி - தோல்விக்கு காரணம் இதுதானாம்

Ravindra Jadeja Chennai Super Kings
By Swetha Subash Apr 26, 2022 07:00 AM GMT
Report

சென்னை அணி இந்த சீசனில் 6-வது முறையாக தோல்வியை தழுவி தொடரிலிருந்து வெளியேறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சிஎஸ்கே செல்ல வெறும் 2 சதவீதம் தான் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மீதமுள்ள 6 போட்டிகளிலும் வென்று, மற்ற அணிகளின் வெற்றி, தோல்வி முடிவு பொறுத்து தான் சிஎஸ்கேவின் எதிர்காலம் அமைந்துள்ளது. இந்நிலையில், பஞ்சாப் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் 3-வது ஓவரில் 41 ரன்கள் தான் அடிக்க வேண்டும் என்ற நிலை இருந்தும் சிஎஸ்கே தோல்வியை தழுவியது.

ஏங்க..தப்ப உங்கமேல வெச்சிக்கிட்டு மத்தவங்கள குறை சொன்னா எப்படி - தோல்விக்கு காரணம் இதுதானாம் | Chennai Teams 6Th Loss In Ipl Match Reason

கேப்டன் ஜடேஜா பெரிய ஷாட் ஆடாமல், கடைசி ஓவரின் 5-வது பந்தில் சிக்சர் அடித்து ரசிகர்களை வெறுப்பேற்றினார். போட்டி முடிந்து பேசிய ஜடேஜா, “போட்டியில் நாங்கள் நன்றாகவே தொடங்கினோம். நல்ல முறையில் பந்துவீசி பஞ்சாப் வீரர்களை கட்டுப்படுத்தினோம். ஆனால் கடைசி கட்டத்தில் கூடுதலாக 15 ரன்களை கொடுத்துவிட்டோம்.

இறுதி கட்டத்தில் எங்களுடைய பவுலர்கள் நாங்கள் வகுத்த யுத்தியை பின்பற்றவில்லை. பஞ்சாப்பை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி இருந்திருக்க வேண்டும். ராயுடுவின் பேட்டிங் சிறப்பாக அமைந்தது. பெரிய இலக்கை துரத்தும் போது தொடக்கத்தில் கொஞ்சம் ரன்களை சேர்க்க வேண்டும்.

ஆனால் நாங்கள் முதல் 6 ஓவரில் போதிய ரன்களை அடிக்கவில்லை. இதனால் நடுவரிசை வீரர்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டது. முதல் 6 ஓவரை நன்றாக பேட்டிங்கில் ரன் குவிக்க வேண்டும். அடுத்த போட்டியில் சிறப்பாக விளையாடுவோம்” என்று கூறினார்.

அணியின் தோல்விக்கு முக்கிய காரணமே பேட்டிங், பந்துவீச்சில் ஜடேஜா சொதப்பியது தான். ஆனால், அது குறித்து பேசாமல், மற்றவர்கள் மேல் குறை கூறிவிட்டு சென்றார்.