சென்னை அணி வீரருக்கு திருமணம் - வேஷ்டி சட்டையில் களமிறங்கிய தல தோனி
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் வேஷ்டி சட்டையில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளது.
நடப்பாண்டு ஐபிஎல் தொடர் மார்ச் 26ஆம் தேதி கோலகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் நடப்பு சாம்பியனான சென்னை அணி விளையாடிய 6 போட்டிகளில் 5 போட்டிகளில் தோல்வியை தழுவி அதிர்ச்சியளித்தது.
புள்ளி பட்டியலில் 9 வது இடத்தில் உள்ள அந்த அணி அடுத்ததாக வரும் 21 ஆம் தேதி மும்பை அணியுடன் மோதவுள்ளது.
இதனிடையே சென்னை அணியில் இடம் பெற்றுள்ள நியூசிலாந்து வீரர் டெவன் கான்வேவுக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது. இதனை முன்னிட்டு அந்த அணி வீரர்கள் நேற்று பாரம்பரியமாக வேஷ்டி சட்டை அணிந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
Devonum Deviyum! ?
— Chennai Super Kings (@ChennaiIPL) April 18, 2022
Happy Whistles for the soon-to-be's! Wishing all the best to Kim & Conway for a beautiful life forever!#WhistlePodu #Yellove ? pic.twitter.com/yPJe5DBQQK
குறிப்பாக முன்னாள் கேப்டன் தோனியின் புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது. இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.