‘எங்க போனாலும் நம்ம பசங்களுக்கு உற்சாக வரவேற்பு தான் அப்பு’ - சூரத்தில் சிஎஸ்கே-வுக்கு உற்சாக வரவேற்பு அளித்த ரசிகர்கள் படை
வருகிற மார்ச் 26-ம் தேதி தொடங்கவுள்ள நடப்பாண்டு ஐபிஎல் 15-வது சீசனுக்கான போட்டி அட்டவணையை நேற்று பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக வெளியிட்டது.
அதன்படி மார்ச் 26-ம் தேதி தொடங்கும் இந்த தொடர் மே 29-ம் தேதி முடிவடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை வான்கடே மைதானத்தில் மாலை தொடங்கவுள்ள இந்த தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதவுள்ளன.
இந்நிலையில் ஐபிஎல் தொடருக்கான பயிற்சிகளை சிஎஸ்கே அணி சூரத் நகரில் உள்ள லால்பாய் காண்ட்ராக்டர் மைதனாத்தில் தொடங்கியுள்ளது.
Everywhere we Go #unbelievable the love skipper receives #wearethechennaiboys pic.twitter.com/YcXGRZ6TNF
— Russell (@russcsk) March 6, 2022
கேப்டன் தோனி உள்ளிட்ட பல அணி வீரர்கள் நேற்று சூரத் சென்றடைந்த நிலையில் அங்கு அவர்களுக்காக உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சூரத் நகருக்குள் சிஎஸ்கேவின் வாகனம் நுழைந்தவுடன், சாலையின் இருபுறமும் குவிந்திருந்த ரசிகர்கள் 'தோனி, தோனி' என முழக்கமிட்டு, அவரை பார்க்க முயன்றனர்.
இதனை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சிஎஸ்கே அணி மேலாளர் ரஸல், “எங்கு சென்றாலும், சென்னை பசங்களுக்கு அதிகப்படியான பாசம் குவியும்” என பதிவிட்டுள்ளார்.
மேலும், தோனி பேருந்தை விட்டு கீழே இறங்கியதும், அவரை காண கூட்டம் அலைமோதிய வீடியோக்களும் இணையத்தில் பரவி வருகின்றன.