மது காலி பாட்டிலை கொடுத்து 10 ரூபாயை திரும்ப பெறலாம் - டாஸ்மாக்
மது வாங்கும்போது 10 ரூபாய் அதிகம் செலுத்த வேண்டும்.. காலி பாட்டிலை கொடுத்து அந்த 10 ரூபாயை திரும்ப பெறலாம்.
காலி மதுபாட்டில்
தமிழக அரசின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் அமலுக்கு வந்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வாடிக்கையாளர்கள் மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை பொதுவெளியில் வீசுவதை தவிர்க்கும் பொருட்டு
அரசு திட்டம்
அவற்றை மதுபான கடைகளிலேயே திரும்பப் பெரும் திட்டத்தின்படி மது பாட்டில்களை வாங்கும் போது மது பாட்டில் ஒன்றுக்கு ரூபாய் பத்து கூடுதலாக பெற்று மது அருந்திவிட்டு காலி பாட்டில்களை திரும்ப அதே மதுபான விற்பனை கடைகளில் ஒப்படைக்கும் போது
ஏற்கனவே செலுத்திய பத்து ரூபாயை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் நோக்கம் காலி பாட்டில்களை பொது வெளியில் வீசி சுற்றுச்சூழல் மாசுபடுவதை தடுப்பது ஆகும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இத்திட்டம் சென்னை வடக்கு, தெற்கு மற்றும் மத்திய ஆகிய மூன்று மாவட்டங்களிலும் செயல்படுத்தப்பட உள்ளது.