அன்று சுவாதி - இன்று சுவேதாவா? நடுரோட்டில் கல்லூரி மாணவி கத்தியால் குத்தி கொலை
தாம்பரத்தில், தனியார் கல்லூரி மாணவியை அவரது காதலன் கத்தியால் குத்தி கொலை செய்து தானும் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை குரோம்பேட்டை ராதாநகர் பகுதியை சேர்ந்தவர் மதியழகன் மாநகர அரசு பேருந்து ஓட்டுநராக பணியாற்றி வருகிறார். அவரின் மகள் சுவேதா தாம்பரம் தனியார் கல்லூரியில் லேப் டெக்னீசியன் படித்து வருகிறார்.
இந்த நிலையில் சுவேதா படித்துவரும் தாம்பரம் தனியார் கல்லூரி அருகே அவரும் அவரின் காதலன் திருக்குவளை பகுதியைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பவரும் நீண்ட நேரமாக பேசிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராமச்சந்திரன் திடீரென தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சுவேதாவின் கழுத்தில் குத்தி கொலை செய்து விட்டு அவரும் கழுத்தை அறுத்துக் கொண்டுள்ளார்.
இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சேலையூர் போலீசாருக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.