''அரபு நாட்ட அசத்த வந்துட்டோம்னு சொல்லு '' சி.எஸ்கே வெளியிட்ட மாஸ் வீடியோ!

StartTheWhistles Yellove WhistlePodu
By Irumporai Aug 14, 2021 07:42 PM GMT
Report

2021ஆம் ஆண்டிற்கான ஐபிஎல் தொடர் கொரோனா பரவல் காரணமாக பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் பாதியில் நிறுத்தப்பட்ட ஐபிஎல் தொடர் வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்க உள்ளது.

இதில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மீண்டும் கடந்த வியாழக்கிழமை யுஏஇ சென்றுள்ளனர்,இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் ட்விட்டர் பக்கம் சென்னை அணி யுஏஇ சென்றுள்ளது தொடர்பாக வீடியோ பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதில் சென்னை அணி சென்னையில் இருந்து கிளம்பியது முதல் யுஏஇ சென்று ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட்டது வரை சில காட்சிகள் இடம்பெற்றுள்ளன. அதில் சென்னை சூப்பர் கிங்ஸூக்கு பெரிய விசில் அடிங்க பாடலுடன்  இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

ஐபிஎல் தொடரின் இரண்டாவது போட்டியில் செப்டம்பர் 19ஆம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

அதன்பின்னர் பெங்களூரு(செப்டம்பர் 24), கொல்கத்தா நைட் ரைடர்ஸ்(செப்டம்பர் 26), சன்ரைசர்ஸ்(செப்டம்பர் 30), ராஜஸ்தான்(அக்டோபர் 2), டெல்லி(அக்டோபர் 4), பஞ்சாப் கிங்ஸ்(அக்டோபர் 7) ஆகிய போட்டிகளில் பங்கேற்க உள்ளது

 இதுவரை நடந்த 7 போட்டிகளில் சென்னை அணி 5 வெற்றிகளு   2 தோல்விகள் பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. இந்த முறை csk சிறப்பாக செயல்பட்டு இம்முறை கோப்பையை வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்கள் எண்ணமாக உள்ளது .