பயமா இருக்கா... இன்னும் பயங்கரமா இருக்கும்... - சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மாஸ் வீடியோ...!

Chennai Super Kings Cricket Viral Video
By Nandhini Jan 02, 2023 06:34 AM GMT
Report

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெளியிட்ட வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல். ஏலம் 2023 -

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஐபிஎல் 2023 ஏலம் சமீபத்தில் கொச்சியில் நடைபெற்று முடிந்தது. எதிர்பார்த்தபடி மினி-ஏலம் பல புதிய சாதனைகளைப் படைத்தது. சில பிரபலமான பெயர்கள் பெரிய பணத்திற்குச் சென்றன. சில குறைவாக அறியப்பட்ட வீரர்கள் பெரும் சம்பளத்தைப் பெற்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி

இந்தியாவில் நடைபெற உள்ள ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கலந்து கொள்ள உள்ளது. இந்த அணி இதுவரை 4 முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. சென்னை அணிக்கு உலகம் முழுவதும் அதிக ரசிகர்கள் உள்ளனர். கடந்த முறை நடைபெற்ற ஐபிஎல் தொடரில் சென்னை அணி அடுத்தடுத்த தோல்விகளை கண்டு புள்ளிப்பட்டியலில் 9-வது இடத்துக்கு சரிந்து விழுந்தது.

இதனையடுத்து, ஐபிஎல் தொடருக்கு சிறப்பாக தயாராகும் பொருட்டு அணியில் பல மாற்றங்கள் கொண்டுவரப்பட்டன. இதற்காக இளம் வீரர்களை ஏலத்தில் எடுக்கப்பட்டனர். டி20 உலக கோப்பையை வெல்ல முக்கிய காரணமாக அமைந்த ஆல் ரவுண்டர் பென்ஸ்டோக்சை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் எடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்தது.

chennai-super-kings-viral-video-cricket

மாஸ் வீடியோ வைரல்

இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. அந்த வீடியோவில், 2022ம் ஆண்டின் படங்களில் இடம்பெற்ற டயலாக்குகள் இடம்பெற்றுள்ளன. தற்போது இது தொடர்பான வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள் உற்சாகத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.