குலுங்கிய ஸ்டேடியம்..15 ரன்கள் வித்தியாசத்தில் லக்னோ அணியை வீழ்த்தி மிரட்டல் வெற்றி பெற்றது சென்னை சூப்பர் கிங்ஸ்

MS Dhoni Chennai Super Kings Lucknow Super Giants KL Rahul IPL 2023
By Thahir Apr 04, 2023 03:19 AM GMT
Report

லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் மிரட்டல் வெற்றி பெற்றது.

அதிரடி காட்டிய சென்னை சூப்பர் கிங்ஸ்

இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் 6வது போட்டி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், கே.எல்.ராகுல் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும் மோதின.

Chennai Super Kings team won

இரு அணிகளும் நேற்று இரவு சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின இந்த போட்டியில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதையடுத்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. தொடக்க வீரர்களாக ருத்துராஜ் கெய்க்வாட் (57), கான்வே (47), சிவம் துபே (27) மற்றும் அம்பத்தி ராயூடு (27*) ஆகியோர் தங்களத் பங்களிப்பை சரியாக செய்து கொடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 217 ரன்கள் எடுத்தது.

மிரட்டி எடுத்த மொய்யின் அலி 

பின்னர் 218 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக களம் இறங்கிய கே.எல் ராகுல் மற்றும் கெய்ல் மெயர்ஸ் ஆகியோர் அதிரடி துவக்கம் கொடுத்து முதல் விக்கெட்டிற்கே 6 ஓவர்களுக்குள் 79 ரன்கள் எடுத்து கொடுத்தனர்.

போட்டியின் 6வது ஓவரில் கே.எல் ராகுலின் விக்கெட்டை எடுத்த மொய்ன் அலி போட்டியில் திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

தீபக் ஹூடாவை (2) மிட்செல் சாட்னரும், க்ரூணல் பாண்டியாவை (9) மொய்ன் அலியும் அடுத்தடுத்து வெளியேற்றி அசத்தினர்.

Chennai Super Kings team won

அசத்தல் வெற்றி 

இதன்பின் களமிறங்கிய ஸ்டோய்னிஸ் (21), நிக்கோலஸ் பூரண் (32) மற்றும் பதோனி (17) ஆகியோர் தங்களது பங்களிப்பை ஓரளவிற்கு சரியாக செய்து கொடுத்தாலும், மொய்ன் அலி, சாட்னர் ஆகியோர் பெரிதாக ரன் கொடுக்காமல் கச்சிதமாக பந்துவீசியதால் 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 205 ரன்கள் மட்டுமே எடுத்த லக்னோ அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சார்பில் அதிகபட்சமாக மொய்ன் அலி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Chennai Super Kings team won