விகெட்டுகளை தெறிக்க விட்ட சிஎஸ்கே : வெற்றி யாருக்கு
Chennai Super Kings
IPL 2023
By Irumporai
2 years ago

Irumporai
in கிரிக்கெட்
Report
Report this article
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறவுள்ள லீக் போட்டியில் சென்னை மற்றும் ஐதராபாத் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.
ஐபிஎல் தொடர்
சென்னையில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்கிய ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன.
டாஸ் வென்ற சென்னை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி,ஹைத்தராபாத் அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் ஹாரி புரூக் 18 ரன்னில் அவுட்டானார்.
அபிஷேக் சர்மா 34 ரன்னிலும், ராகுல் திரிபாதி 21 ரன்னிலும், மார்கிரம் 12 ரன்னிலும், கிளாசன் 17 ரன்னிலும் அவுட்டாகினர். இறுதியில், ஐதராபாத் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 134 ரன்கள் எடுத்தது. சென்னை அணி சார்பில் ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினார். இதையடுத்து, 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சென்னை அணி களமிறங்குகிறது.