இன்னும் பல வருடங்கள் சென்னை அணியை வழிநடத்த வேண்டும்; தோனியிடம் கோரிக்கை வைத்த முதலமைச்சர் மு.க ஸ்டாலின்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைவனான தோனி, இன்னும் பல வருடங்கள் சென்னை அணியை வழிநடத்த வேண்டும் என முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தோனியிடம் கோரிக்கை வைத்துள்ளார்.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை பாராட்டும் வகையில் சென்னை கலைவானார் அரங்கில் பாராட்டு விழா ஏற்பாடு செய்யப்பட்டு அது நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் தோனியும், தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலினும் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் தோனியை வெகுவாக புகழ்ந்து பேசிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், தோனி இன்னும் பல வருடங்கள் சென்னை அணியை வழிநடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.
இது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசுகையில், “சாதாரண பின்புலத்துடன் உச்சம்தொட்ட தோனி ஒவ்வொரு தமிழரின் மனதிலும் இருக்கிறார். ஐபிஎல் போட்டிகளில் இன்னும் பல சீசன்களில் தோனி விளையாட வேண்டும்.
எப்போது இலக்குதான் முக்கியம், அதை அடைய உழைப்பு தான் மிக முக்கியம். நீங்கள் உங்கள் விளையாட்டை தொடருங்கள். நாங்கள் எங்கள் மக்கள் பணியை தொடருகிறோம்” என்று தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “சென்னை அணிக்கான பாராட்டு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சி அளிக்கிறது
. சென்னை என்றாலே சூப்பர்தான். முதல்வராக அல்ல, தோனியின் ரசிகராக
பாராட்டு விழாவிற்கு வந்திருக்கிறேன். எனது குடும்பமே தோனியின் ரசிகர்தான்.
எனது தந்தை, மகன்,பேரன் என அனைவருமே தோனியின் ரசிகர்கள்தான்.
கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் உள்ளவன் நான்” என்றார்.