சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய ஜெர்சி வெளியீடு - என்ன மாற்றம் தெரியுமா?
ஐபிஎல் தொடரின் முக்கிய அணியும்,சென்ற ஆண்டு சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி புதிய ஜெர்சியை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் கடந்த 2008 ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இதுவரை 14 ஐபிஎல் போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில்.இந்த வருடத்தின் 15வது ஐபிஎல் போட்டிகள் வரும் மார்ச் 26 ஆம் தேதி துவங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது.
இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி,கடந்த தொடரின் ரன்னரான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
Unveiling with Yellove! ?
— Chennai Super Kings (@ChennaiIPL) March 23, 2022
Here’s a ? at our new threads in partnership with @TVSEurogrip! ?#TATAIPL #WhistlePodu ? pic.twitter.com/pWioHTJ1vd
இந்தநிலையில், இந்த வருட ஐபிஎல் தொடருக்கான தனது புதிய ஜெர்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று வெளியிட்டுள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கடந்த வருட ஜெர்சிக்கும், இந்த வருடத்திற்கான புதிய ஜெர்சிக்கும் பெரிதாக மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை.
விளம்பர நிறுவங்களின் பெயர் மட்டுமே மாறியுள்ளன. புதிய ஜெர்சியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது ட்விட்டர் பக்கத்தின் மூலம் வெளியிட்டுள்ளது.