நீங்க அள்ளிக்கொடுத்தது போதும்..கிளம்புங்க..சென்னை அணியில் தோனியின் அதிரடி..!
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்ள உள்ளது.
15-வது ஐபிஎல் போட்டியின் முக்கிய அணிகளில் ஒன்று சென்னை சூப்பர் கிங்ஸ்.இந்த அணி கடந்த 2021 ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது.
இந்நிலையில் இந்தாண்டின் நடப்பு தொடரில் தொடக்கத்தில் இருந்த சென்னை தொடர் தோல்விகளை சந்தித்து வருவதார் சென்னை ரசிகர்களை கடும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
சென்னை அணி தொடக்கத்தில் அணியின் கேப்டனாக ரவீந்திர ஜடேஜா நியமிக்கப்பட்டார். இவரின் தலைமையில் சென்னை அணி 8 போட்டிகளில் விளையாடி 2 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
தொடர் தோல்விக்கு காரணம் சென்னை அணி வீரர்களின் மோசமான பீல்டிங் தான் காரணம் என்று சொல்லப்பட்டு வந்தது.
கடந்த கால போட்டிகளில் சிறப்பாக விளையாடிய ரவீந்திர ஜடேஜா நடப்பு தொடரில் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு விளையாடாமல் சொதப்பி வந்தார்.
அவரின் சொதப்பலுக்கு காரணம் கேப்டன்சி அழுத்தமே என்று கூறப்பட்டது. இந்நிலையில் ரவீந்திர ஜடேஜா கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது பதவியில் இருந்து விலகினார்.
இதையடுத்து கேப்டன்சி பதவி மீண்டும் தோனியிடம் வழங்கப்பட்டது. தொடர் தோல்விகளால் மிச்சம் உள்ள போட்டிகளில் சென்னை அணி வெற்றி பெற்றால் தான் ப்ளே ஆஃப் வாய்ப்பை பெறும் என்ற நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில், தோனி பொறுப்பேற்ற பின் முதல் போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது.
அதை தொடர்ந்து பெங்களூர் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி தோல்வியை தழுவியது.இதனால் ப்ளே ஆஃப் செல்லும் வாய்ப்பை இழந்தது.
ப்ளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட சென்னை அணி இன்று டெல்லி கேப்பிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இன்று நடைபெறும் போட்டியில் சென்னை அணியில் மாற்றங்கள் இருக்கலாம் என்று எதிர்பாரக்கப்படுகிறது.
தொடக்க வீரர்களாக கான்வே மற்றும் ருத்துராஜ் கெய்க்வாட் களமிறங்குவார்கள். அதை தொடர்ந்து மிடில் ஆர்டரில் ராபின் உத்தரப்பா,அம்பத்தி ராயூடு,மொயின் அலி மற்றும் தோனி களமிறகுவார்கள்.
ஆல் ரவுண்டர் வரிசையில் ஜடேஜாவும்,பிராவோவிற்கும் இடம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த இரண்டு போட்டிகளில் அதிக ரன்களை அள்ளிக்கொடுத்த ப்ரெடோரியஸ் அணியில் இருந்து நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக டுவைன் பிராவோ மீண்டும் அணியில் சேர்க்கப்படலாம் என தெரிகிறது.
இன்றைய போட்டியில் சென்னை அணியின் உத்தேச வீரர்களின் பட்டியல்:
ருத்துராஜ் கெய்க்வாட், டெவன் கான்வே, மொய்ன் அலி, ராபின் உத்தப்பா, அம்பத்தி ராயூடு, தோனி, ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ, சிம்ரஜித் சிங், முகேஷ் சவுத்ரி, மகேஷ் தீக்ஷன்னா.