ஸ்கெட்ச் போட்ட KKR... வெளுத்துவிட்ட ஜடேஜா.. csk மாஸ் வெற்றி
மும்பை, பெங்களூரு என இரு முக்கிய அணிகளையும் ஐபிஎல் தொடரின் இரண்டாம் பாதியில் தோற்கடித்த இரு அணிகள் இன்று மோதின.
புள்ளிப்பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சென்னை அணியும், 4வது இடத்தில் உள்ள கொல்கத்தா அணியும் மோதுவதால் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
அபுதாபியில் உள்ள ஷேக் சையத் மைதானத்தில் இந்த போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா பேட்டிங் தேர்வு செய்தது. 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 171ரன்கள் எடுத்தது கொல்கத்தா அணி. கடினமான இலக்குடன் களம் இறங்கிய சென்னை அணியில் தொடக்கமாக ருதுராஜூம், டுப்ளெசியும் சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர்.
இருவரும் 40+ ரன்கள் எடுத்து அணியின் ஸ்கோரை எளிதாக 100 ரன்களுக்கு எடுத்துச் சென்றனர். ஆனால், அடுத்து களமிறங்கிய பேட்டர்கள் கொல்கத்தா அணியின் பவுலிங்கில் சிக்கி அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர்.
மொயின் அலி, ராயுடு, ரெய்னா, தோனி என இலக்கை எட்ட வேண்டிய பேட்டர்கள் அவுட்டாகி பெவிலியன் திரும்பியதால்,சிஎஸ் கே வுக்கு அழுத்தம் அதிகமானது. வருண் சக்கிரவர்த்தி வீசிய 18வது ஓவரில், ரெய்னா அவுட்டாக, கூக்ளி பந்தில் சிக்கி தோனி அவுட்டானார்.
போட்டியை முடிக்க வேண்டிய பொறுப்பில் ஜடேஜாவும், சாம் கரணும் இருந்தனர். கடைசி இரண்டு ஓவரில் வெற்றியை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் விளையாடினர். ஒரே ஓவரில் போட்டியை சென்னையின் பக்கம் இழுத்தார் ஜடேஜா. சுனில் நரேன் வீசிய கடைசி ஓவரில், ஜடேஜாவுடன் களத்தில் நிற்காமல் முக்கியமான தருணத்தில் கேட்ச் கொடுத்து அவுட்டானார் சாம் கரண்.
அவரைத் தொடர்ந்து தாகூர் களமிறங்கினார். இந்த ஓவரில் மூன்று ரன்கள் ஓடி போட்டியை சமன் செய்தனர். 3 பந்துகளில் 1 ரன் தேவை என்ற நிலையில், பரபரப்பாக நகர்ந்தது போட்டி. மூன்றில், முதல் பந்து டாட் பால் ஆனது.
A last ball Thriller for the 7th time! What a win, what a day, what a game! ?#CSKvKKR #WhistlePodu #Yellove ? pic.twitter.com/S9gKQryhbD
— Chennai Super Kings - Mask P?du Whistle P?du! (@ChennaiIPL) September 26, 2021
அடுத்த பந்தில் ஜடேஜாவுக்கு அவுட் கொடுக்கப்பட்டது. கடைசி 1 பந்தில் 1 ரன் எடுக்க தீபக் சஹார் களமிறங்கினார். கடைசி பந்தில் 1 ரன் எடுத்து போட்டியை வென்றார் தீபக் சஹார்.
ஐபிஎல் வரலாற்றில், இந்த போட்டியையும் சேர்த்து இதுவரை 7 முறை கடைசி பந்தில் வெற்றியை ஈட்டியுள்ளது சென்னை. இதில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மட்டுமே 3 முறை கடைசி பந்து வெற்றியை தட்டிச் சென்றுள்ளது சிஎஸ்கே.