டூபிளசிஸிக்கு வாய்ப்பு இல்லை… இந்த வீரரை சென்னை சூப்பர் கிங்ஸ் விடாது ; இர்பான் பதான் ஓபன் டாக்
அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்பட வாய்ப்புள்ள வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தனது கருத்தை முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
ஐபிஎல் 2022 மெகா ஏலம் நடக்க இருப்பதால் ஒவ்வொரு அணியும் தலா 4 வீரர்களை மட்டும் தக்கவைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்துள்ளது.
மூன்று இந்திய வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரராக இருக்கலாம் அல்லது இரண்டு இந்திய வீரர்கள் இரண்டு வெளிநாட்டு வீரர்கள் வைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டுள்ளது.
இவர்களைத் தவிர மற்ற அனைத்து வீரர்களும் ஏலத்திற்கு விடப்பட வேண்டும்.
மேலும் புதிதாக இணைந்துள்ள 2 அணிகள் ஏலத்திற்கு வெளியே 3 வீரர்களை தக்க வைத்துக்கொள்ளலாம் அதில் 2 இந்திய வீரர்கள் ஒரு வெளிநாட்டு வீரர் என மூன்று வீரர்களை தக்க வைத்துக்கொள்ள பிசிசிஐ அனுமதித்துள்ளது.
தக்க வைக்கப்படும் வீரர்கள் பட்டியலை 30ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கெடு விதித்துள்ளதால்,
ஒவ்வொரு அணியும் தங்களக்கு தேவையான வீரர்களை தேர்வு செய்து கொள்வதில் முழு மூச்சாக செயல்பட்டு வருகின்றன.
அதே போல் முன்னாள் வீரர்கள், கிரிக்கெட் வல்லுநர்கள் ஒவ்வொரு அணிக்கும் தேவையான தங்களது ஆலோசனைகளை வழங்கி வருகின்றனர்.
அந்தவகையில், ஐபிஎல் தொடர் குறித்து பல்வேறு விசயங்கள் பேசி வரும் முன்னாள் இந்திய வீரரான இர்பான் பதான்,
அடுத்த வருட ஐபிஎல் தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் தக்க வைக்கப்பட வாய்ப்புள்ள்ள நான்கு வீரர்கள் யார் யார் என்பது குறித்தான தனது கருத்தையும் ஓபனாக வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து இர்பான் பதான் பேசுகையில், “என்னை பொறுத்தவரையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ருத்துராஜ் கெய்க்வாட், தோனி மற்றும் ஜடேஜா ஆகிய மூன்று இந்திய வீரர்களை தக்க வைத்து கொள்ளும் என கருதுகிறேன்.
அதே போல் வெளிநாட்டு வீரராக டூபிளசிஸை விட மொய்ன் அலிக்கே சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முன்னுரிமை கொடுக்கும் என கருதுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.