உள்ளே டூவைன் பிராவோ..வெளியே சாம்கரன் தோனியின் மாஸ்டர் ப்ளான்
ஐபிஎல் டி.20 தொடரின் இன்றைய போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதுகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறுவது 99 சதவீதம் உறுதியாகிவிட்டது, அதே போல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்துவிட்டதால் இந்த போட்டி இரு அணிகளுக்குமே முக்கியத்துவம் இல்லாத போட்டியாகவே இருக்கும்.
இருந்த போதிலும் ஹைதராபாத் அணி கடைசி இடத்தில் இருந்து முன்னேற வேண்டும் என்றால் ஹைதராபாத் அணி இந்த போட்டியில் சிறப்பாக விளையாட வேண்டிய கட்டாயத்தில் உள்ளது.
இதனால் இரு அணிகள் இடையேயான இந்த போட்டி பரபரப்பிற்கு பஞ்சம் இருக்காது என்றே தெரிகிறது. இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரிதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே தெரிகிறது.
ஒருவேளை சென்னை அணி எதாவது மாற்றம் செய்ய வேண்டும் என்ற முடிவை எடுத்தால், கடந்த போட்டியில் ரன்களை வாரி வழங்கிய சாம் கர்ரானை மட்டும் அணியில் இருந்து நீக்கப்படுவார்.
அவருக்கு பதிலாக கடந்த போட்டியில் விளையாடாத டூவைன் பிராவோ மீண்டும் அணியில் சேர்க்கப்படுவார். இது தவிர அணியில் பெரிதாக மாற்றங்கள் இருக்காது என்றே எதிர்பார்கப்படுகிறது.
ராபின் உத்தப்பா, ஜெகதீசன் போன்ற வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வரும் வீரர்கள் அடுத்தடுத்த போட்டிகளில் விளையாடுவார்கள் என்றே தெரிகிறது.
இன்றைய போட்டிக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உத்தேச ஆடும் லெவன்;
ருத்துராஜ் கெய்க்வாட், டூபிளசிஸ், மொய்ன் அலி, அம்பத்தி ராயூடு, சுரேஷ் ரெய்னா, தோனி, ரவீந்திர ஜடேஜா, டூவைன் பிராவோ, ஷர்துல் தாகூர், தீபக் சாஹர், ஜோஸ் ஹசில்வுட்.