வலை பயிற்சியில் பந்துகளை பந்தாடிய தல தோனி : கொண்டாட்டத்தில் சிஸ்கே ரசிகர்கள்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 2008ஆம் ஆண்டு முதல் தற்போது வரை கேப்டனாக மகேந்திர சிங் தோனி தலைமை தாங்கி வருவது நம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்.
விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக, ஐபிஎல் தொடரில் தன்னுடைய அதிரடி ஆட்டத்தின் மூலமாக நிறைய போட்டிகளில் தனது அணியை வெற்றிபெற வைத்துள்ளார்.
அதே சமயம் ஒரு கேப்டனாக சென்னை இடையே நிறைய முறை இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
மூன்று முறை சென்னையை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்த ஐபிஎல் தொடரில் சென்னை அணி மிகவும் மோசமாக விளையாடியது.
ஆனால் அதை திருத்தி அமைக்கும் விதமாக இந்த ஆண்டு நடைபெற்ற 7 போட்டிகளில் ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது.
மகேந்திர சிங் தோனி கடந்த ஆண்டு முதல் சென்னை அணிக்கு தன்னுடைய அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்த தவறுகிறார்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தன்னுடைய பழைய அதிரடி ஆட்டத்தை மகேந்திர சிங் தோனி வெளிப்படுத்துவார் என்று ரசிகர்கள் ஆவலாக இருந்த நிலையில், நடந்து முடிந்த 7 போட்டிகளில் அவ்வளவு சிறப்பாக எந்த போட்டியிலும் விளையாடவில்லை.
இந்நிலையில் மீதமுள்ள ஐபிஎல் போட்டிகள் வருகிற செப்டம்பர் மாதம் 19-ம் தேதி முதல் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. அதற்காக மகேந்திர சிங் தோனி தற்போது தயாராகி வருகிறார்.
பயிற்சி எடுத்து வரும் மகேந்திர சிங் தோனி பிரமாண்ட சிக்ஸர்கள் அடிக்கும் வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆரவாரத்தை ஏற்படுத்தியுள்ளது.
மகேந்திர சிங் தோனி விளையாடும் விதத்தை பார்க்கையில் பழைய தோனியாக அவர் திரும்பிவிட்டார் என்று ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
வருகிற செப்டம்பர் மாதம் 19ம் தேதி முதல் போட்டியில் சென்னை மற்றும் மும்பை அணிகள் மறுபடியும் மோத உள்ளன.
அந்த போட்டி தொடங்கி அக்டோபர் 15-ஆம் தேதி வரை இந்த ஆண்டு ஐபிஎல் நடத்தி முடிக்கப்பட உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மிகவும் அற்புதமாக இந்த ஆண்டு விளையாடி வருகிறது.
ஓபனிங் இடத்தில் டுப்லஸ்ஸிஸ் மற்றும் ருத்ராஜ் அதிரடியாக விளையாடி வருகின்றனர். மூன்றாவது இடத்தில் மொயின் அலி மிக அதிரடியாக விளையாடி வருகிறார்.
அதேபோல சாம் கரன், ரவீந்திர ஜடேஜா, மற்றும் டுவைன் பிராவோ என சென்னை அணி பலமிக்கஅணியாக மீதமுள்ள ஐபிஎல் போட்டிகளில் விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.