பைத்தியக்காரி என கொடுமைப்படுத்திய மாமியார் - 4 மாதத்தில் மணப்பெண் தற்கொலை! பரபரப்பு மரண வாக்குமூலம்!
சென்னை திருமுல்லைவாயலில், கூடுதல் வரதட்சனை வாங்கி வராததால் மருமகளின் அறைக்கு செல்லும் மின்சாரத்தை துண்டித்து கொடுமைப்படுத்திய மாமியாரால் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆவடி அருகே திருமுல்லைவாயல் அன்னை சத்யா நகரை சேர்ந்த பாலமுருகனுக்கும் எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த ஜோதிஸ்ரீ என்ற பட்டதாரி இளம்பெண்ணுக்கும் கடந்த டிசம்பர் மாதம் 25-ம் தேதி பெற்றோர்களால் நிச்சயிக்கப்பட்டு திருமணம் நடந்துள்ளது.
திருமணத்தின் போது பெண் வீட்டார் பேசிய படி நகை பணம் வரதட்சனையாக வழங்கப்பட்ட நிலையில், திருமணத்திற்கு பிறகு கணவன் பாலமுருகன் மற்றும் அவரது தாயார் அம்சா ஆகியோர் சேர்ந்து தாங்கள் வீட்டு கடன் வாங்கி உள்ளதால் எங்களுக்கு பணம் தேவைப்படுகிறது என்றும் உங்கள் வீட்டில் சென்று வாங்கி கொடு என்றும் தினமும் ஜோதிஸ்ரீயை துன்புறுத்தி வந்துள்ளனர்.
இந்த கொடுமையை தாங்க இயலாமல், கடந்த டிசம்பர் மாத இறுதியிலேயே ஜோதிஸ்ரீ பாலமுருகனை விட்டு பிரிந்து பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார் அதன் பின்னர் இருதரப்பிலும் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில், கடந்த ஏப்ரல் மாதம் 4-ம் தேதி ஜோதிஸ்ரீ அவரது கணவன் வீட்டிற்கு சென்றார்.
அப்போது அவரது மாமியார் அம்சா அவரை வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. இதனை தொடர்ந்து ஜோதிஸ்ரீ மாமியாரை மீறி வீட்டின் முதல் மாடியான அவரது அறைக்கு சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அம்சா ஜோதிஸ்ரீ அறைக்கு செல்லும் மின் வயரை துண்டித்துள்ளார்.
இந்த நிலையில், மன வேதனையில் இருந்த ஜோதிஸ்ரீ தொடர் கொடுமைகளை தாங்க இயலாமல் வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் உருக்கமான வீடியோ மற்றும் கடிதம் ஒன்று சிக்கியுள்ளது. இதில் தான் பைத்தியக்காரி என்று பட்டம் சூட்டி கணவரும், மாமியாரும் தன்னை கொடுமை செய்ததாக கண்ணீர் வடித்துள்ளார்.
மேலும், அவர் எழுதிய கடிதத்தில் தனது தற்கொலைக்கு
காரணமான தன் கணவரையும், மாமியாரையும் சும்மா விட்டு விட வேண்டாம்
என உருக்கமாக எழுதியுள்ளார்.
ஆதாரங்களை திரட்டிய போலீசார், கணவரையும், மாமியாரையும் கைது
செய்து புழல் சிறையில் அடைத்தனர்.