நீட் தேர்வில் தொடர் தோல்வி; மாணவன் தற்கொலை - சோகத்தில் தந்தை விபரீத முடிவு!
நீட் தேர்வு தோல்வியால் இளைஞர் தற்கொலை செய்துக்கொண்டதையடுத்து தந்தையும் தற்கொலை செய்துள்ளார்.
நீட் தேர்வு
சென்னை, குரோம்பேட்டையில் வசித்த வந்தவர் ஜெகதீஸ்வரன் என்ற மாணவர். மருத்துவம் படிக்கும் நோக்கத்தில் நீட் தேர்வுக்கு தயாராகி வந்தார். 2 முறை நீட் தேர்வு எழுதினார்.
ஆனால் அவரால் நீட் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என கூறப்படுகிறது. இதனால் மனவருத்தத்தில் இருந்த ஜெகதீஸ்வரன் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார்.
தற்கொலை
அவரது உடலை கைப்பற்றிய காவல்துறையினர் உடற்கூறாய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அதனைத் தொடர்ந்து, மகனின் உடல் நேற்று அடக்கம் செய்யப்பட்ட நிலையில் இன்று காலை தந்தை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.