செலவுக்குப் பணம் கேட்ட மகன்.. தந்தையை கொன்று வீடியோ எடுத்த கொடூரம் - பகீர் பின்னணி!
தந்தையை கொன்று மகன் வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஜெகதீஷ் என்பவர் சென்னையில் பேக்கரி கடை ஒன்றை நடத்தி வருகிறார். இவரது மகன் ரோகித் கடந்த 2 மாதங்களுக்கு முன் தந்தைக்கு உதவியாகக் கடையில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில்,ரோகித் தன்னுடைய செலவுக்காகப் பணத்தைத் தந்தையிடம் கேட்டிருக்கிறார்.அதற்கு ஜெகதீஷ், வீட்டில் எந்த வேலைகளையும் செய்வதில்லை, அதோடு நீ பொறுப்பில்லாமல் இருக்கிறாய் என மகனைத் திட்டியிருக்கிறார். அதனால் தந்தை மீது ரோகித் கடும் ஆத்திரத்திலிருந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த 2-ம் தேதி வீட்டில் ஜெகதீஷ், தூங்கிக் கொண்டிருந்த போது இரும்பு ராடு ஒன்றை எடுத்து தலையில் ஓங்கி அடித்துள்ளார். இதில் ஜெகதீஷ் ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்து விழுந்தார். இந்த சம்பவத்தை தன்னுடைய செல்போனில் வீடியோவாக எடுத்த ரோகித் உறவினர்களுக்கு அனுப்பி வைத்துள்ளார்.
கொடூரம்
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த உறவினர்கள் வீட்டிற்கு வந்து பார்த்த போது சடலமாகக் கிடந்தார். இது குறித்துக் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் ஜெகதீஷ் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்குக் அனுப்பி வைத்தனர்.
இதனையடுத்து வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர் மகன் ரோகித்தை கைது செய்து சிறையில் அடைத்தனர். செலவுக்குப் பணம் கொடுக்காத தந்தையை அடித்துக் கொலைசெய்த மகன், அதை வீடியோ எடுத்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.