நடுரோட்டில் நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டல் - வாலிபர் கைது!
100 பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பாலியல் சீண்டல்
சென்னை எம்.கே.பி நகரில் வாலிபர் ஒருவர் சாலையில் தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்துள்ளார். இரவு நேரங்களில் எம்.கே.பி நகர்,வியாசர்பாடி,பெரம்பூர்,கொடுங்கையூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் தனியாக நடந்து செல்லும் பெண்களை பின் தொடர்ந்து சென்று இது போன்ற செயல்களை செய்து வந்தார்.
மோட்டார் சைக்கிளில் வேகமாக பெண்ணிடம் வந்ததும் வேகத்தைக் குறைத்து பெண்களின் உடலை தொட்டு பார்த்து பிறகு வேகமாக சென்று விடுவார். சில நாட்களுக்கு முன் இரவு 7 மணியளவில் இளம் பெண் ஒருவர் சாலையில் நடந்து செல்லும்போது பிரகாஷ் அந்த பெண்ணின் நெஞ்சில் கை வைத்துள்ளார். இதுகுறித்து அந்த பெண் எம்.கே.பி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
ஏற்கனவே சட்டக் கல்லூரி மாணவி ஒருவரின் பின் பகுதியில் தொட்டு பார்த்துவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பிச்சென்றுள்ளார். இதுபோன்று தொடர்ச்சியாக காவல் நிலையத்திற்கு புகார்கள் வந்துள்ளது.
வாலிபர் கைது
இந்நிலையில் போலீஸ் கமிஷனர் தமிழ்வாணன், இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படையினர் பாலியல் சைக்கோ வாலிபரை பிடிக்க அதிரடி வேட்டையில் இறங்கினர். இதில் சிசிடிவி காட்சிகள் மற்றும் வண்டி என் ஆகியவற்றைக் கொண்டு விசாரணை மேற்கொண்ட போலீசார் அந்த சைக்கோ வாலிபரை கைது செய்துள்ளனர்.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் அவரின் பெயர் பிரகாஷ் என்றும் இதுவரை 100க்கும் மேற்பட்ட பெண்களிடம் இதுபோன்ற பாலியல் சீண்டலில் ஈடுபட்டு வந்தது தெரியவந்துள்ளது. பின்னர் போலீசார் அவரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.