40 ஆண்டுகளில் கடல் மட்டம் உயர்ந்து சென்னையின் பல பகுதிகள் தீவுகளாக மாறும் - வெளியான அதிர்ச்சி தகவல்
Chennai
By Nandhini
இந்திய கடற்கரை பகுதிகளில் கடல் மட்டம் வருடத்துக்கு சராசரியாக 1.70 மில்லிமீட்டர் என்ற விகிதத்தில் உயர்ந்து வருவதாகவும், கடந்த 50 ஆண்டுகளில் இந்திய கடற்கரை பகுதிகளில் கடல் மட்டம் 8.5 சென்டிமீட்டர் உயர்ந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
னாமி, புயல் சுழற்சி, கடற்கரை வெள்ளம், கடல் அரிப்பு போன்ற மோசமான நிகழ்வுகளாலும் கடல் மட்டம் உயர்ந்து கடற்கரையில் உள்ள தாழ்வான பகுதிகள் வெள்ளத்தால் மூழ்கும் அபாயத்தை ஏற்படுத்த வாய்ப்புகள் அதிகமாக உள்ளது.
இந்நிலையில், சென்னையில் கடலோரப் பகுதிகளில் கடல் மட்டம் உயர்வதால், 40 ஆண்டுகளில் சென்னையின் பல பகுதிகள் தீவுகளாக மாறும் அபாயம் உள்ளதாக காலநிலை மாற்றங்கள் குறித்த ஆய்வறிக்கையில் தகவல் வெளியாகியுள்ளது.