ஆசிரியர் திட்டியதால் 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்த பள்ளி மாணவி - அதிர்ச்சி சம்பவம்
சென்னை கொரட்டூரில், ஆசிரியர் புகாரை கேட்டு சரியாக படிக்கவில்லையா என பெற்றோர் கண்டித்ததால் பதினொன்றாம் வகுப்பு மாணவி மனமுடைந்து 14வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்த பாஸ்கர், அதே பகுதியில் சொந்தமாக மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மகள் வைஜயந்தி அம்பத்தூர் சூரப்பட்டு பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தார்.
தற்போது ஊரடங்கு தளர்த்தப்பட்டு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால், வைஜய்ந்தி பள்ளி சென்று பயின்று வந்தார். கடந்த 2 நாட்களுக்கு முன்பு வைஜயந்தியின் பள்ளி ஆசிரியர், பாஸ்கரை போனில் தொடர்பு கொண்டு, தங்கள் மகள் ஒரு பாடத்தில் சரியாக படிக்கவில்லை என்று புகார் அளித்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பாஸ்கர் மகளை சரமாரியாக திட்டியுள்ளார். இதில் மனமுடைந்த வைஜயந்தி மறுநாள் பள்ளிக்கு சென்ற பிறகு 14 வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.