பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழந்த வழக்கில் பள்ளி ஊழியர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..!

Death School Arrest Chennai Student Staff உயிரிழப்பு சென்னை பள்ளிமாணவன்
By Thahir Mar 29, 2022 07:08 AM GMT
Report

வளசரவாக்கத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் பள்ளி வாகனம் மோதி இரண்டாம் வகுப்பு மாணவன் பலியான வழக்கில் வேன் டிரைவர்,பெண் ஊழியருக்கு 15 நாள் நீதிமன்ற காவல் வழங்கி பூந்தமல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விருகம்பாக்கம், வேம்புலி அம்மன் கோயில் தெரு, இளங்கோ நகர் பகுதியை சேர்ந்தவர் வெற்றிவேல், இவரது மனைவி ஜெனிபர், இருவரும் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை பார்த்து வருகின்றனர்.

பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழந்த வழக்கில் பள்ளி ஊழியர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..! | Chennai School Student Death School Staff Arrest

இவர்களுக்கு தீக்சித் என்ற 7 வயது சிறுவன் உள்ளான், சிறுவன் வளசரவாக்கம் அடுத்த ஆழ்வார்திருநகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படித்து வந்தான்.

சிறுவன் வழக்கம் போல் நேற்று பள்ளி வேனில் பள்ளிக்கு சென்றான்.இதனிடையே வேனில் இருந்து இறங்கி சென்ற சிறுவன் மீது பள்ளி வேன் மோதியது.

இதில் சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். இதுகுறித்து மாணவனின் பெற்றோர் மற்றும் வளசரவாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

தகவல் அறிந்த சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வளசரவாக்கம் போலீசார் விபத்து நடந்த பகுதியில் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து இறந்து போன சிறுவன் தீக்சித் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவ இடத்திற்கு துணை கமிஷனர்கள் பிரதீப்,தலைமையிலான போலீசார் சம்பவம் நடந்த பள்ளி வளாகத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

பள்ளி வாகனம் மோதி சிறுவன் உயிரிழந்த வழக்கில் பள்ளி ஊழியர்களுக்கு 15 நாள் நீதிமன்ற காவல்..! | Chennai School Student Death School Staff Arrest

விபத்துக்குள்ளான வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். பள்ளி வளாகத்தில் பள்ளிக்கல்வித்துறை, வருவாய் துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இதையடுத்து பள்ளியின் முதல்வர் மற்றும் ஆசிரியர்களை விசாரணைக்காக போலீஸ் நிலையம் அழைத்து வந்து அவர்களிடம் தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

இதில் பள்ளியில் மாணவர்களுக்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதா? வாகனம் தரமான நிலையில் உள்ளதா? என்பது குறித்து வருவாய் துறை அதிகாரிகளும், வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் ஆய்வு செய்தனர்.

போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மாணவன் உயிரிழப்புக்கு காரனமான வாகனத்தை தடயவியல் சோதனை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக முதல் கட்டமாக விபத்து ஏற்படுத்திய பள்ளி வேன் டிரைவர் பூங்காவனம் மற்றும் பெண் ஊழியர் ஞானசக்தி(34), ஆகிய இரண்டு பேரை கைது செய்த போலீசார் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

அவர்கள் இருவருக்கும் 15 நாள் நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.பள்ளியின் தாளாளர் ஜெயா சுபாஷ் பள்ளியின் முதல்வர் தனலட்சுமி ஆகிய 2 பேரின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.