தேசிய மருத்துவர் தினம் - ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட்ட ரிப்பன் மாளிகை!
தேசிய மருத்துவர்கள் தினத்தை முன்னிட்டு, சென்னை மாநகராட்சி அலுவகம் ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது.
பீகார் மாநிலத்தை சேர்ந்த மருத்துவர் பிசி ராய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று இந்தியாவில் மட்டும் தேசிய மருத்துவர்கள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது.
கொரோனா காலத்தில் தன்னலம் கருதாது பணியாற்றிவரும் மருத்துவர்களை அங்கீகரிக்கும் வகையில் பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் கொரோனா காலத்தில் போராடி வரும் மருத்துவர்களை கவுரவிக்கும் விதமாக சென்னை மாநகராட்சியின் தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகை ஆரஞ்சு நிறத்தில் ஒளிரூட்டப்பட்டது.
ஆரஞ்சு வண்ணத்தில் ஜொலிக்கும் இந்த கோட்டையை அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.