சென்னை ராமாபுரத்தில் தியானம்: எம்ஜிஆர் சிலையை திறக்கிறாரா சசிகலா?
சென்னை ராமாபுரம் தோட்டத்திற்கு சசிகலா வந்து சிறிது நேரம் அமர்ந்து தியானத்தில் ஈடுபட போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. மேலும் 2017ம் ஆண்டு அவர் திறக்கப்படவிருந்த எம்ஜிஆர் சிலை இன்று திறப்பதாக கூறப்படுகிறது. 4 ஆண்டுகள் சிறை தண்டனை முடித்துக் கொண்டு இன்று காலை தேவனஹள்ளி பண்ணை வீட்டிலிருந்து சசிகலா புறப்பட்டுச் சென்றார்.
தனது காரில் அதிமுக கொடியை கட்டிக் கொண்டு சென்னை வருகிறார் சசிகலா. இந்நிலையில் அவருக்கு தமிழக எல்லையான ஜூஜூவாடி செக் போஸ்ட்டில் சிறப்பான வரவேற்பு அளிக்கபடுகிறது. அதனையடுத்து சென்னை செம்பரம்பாக்கத்திலிருந்து தி.நகர் வரை 32 இடங்களில் அவருக்கு வரவேற்பு கொடுக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை ராமாபுரம் தோட்டத்திற்கு சசிகலா வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது. அங்கு மாலை நேரத்தில் சசிகலா அமர்ந்து கொண்டு தியானத்தில் ஈடுபட இருப்பதாக கூறப்படுகிறது.

அத்துடன் கடந்த 2017ம் ஆண்டு அதாவது சசிகலா சிறை செல்லப்படுவதற்கு முன்னர் ராமாபுரம் தோட்டத்தில் எம்ஜிஆர் சிலை திறக்கப்படுவதாக இருந்தது. ஆனால் இதுவரைக்கும் திறக்கப்படவில்லை. இன்றைய தினம் சென்னை ராமாபுரம் தோட்டத்தில் சசிகலா திறந்து வைத்தார் என கல்வெட்டில் அவரது பெயர் பொறிக்கப்பட்டிருக்கிறது.
இதனால் இன்றைய தினம் எம்ஜிஆர் சிலையை அவர் திறந்து வைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளிவந்துள்ளன. எம்ஜிஆர் சிலை திறப்பு குறித்து உறுதியான தகவல் இல்லை.