அரசு மருத்துவமனையில் ஏசி தலையில் விழுந்து விபத்து - ஊழியர் பரிதாப பலி!
Chennai
Death
By Sumathi
சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் ஏசி விழுந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏசி விழுந்து விபத்து
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் முதலமைச்சர் காப்பீடு திட்ட பிரிவில் காண்ட்ராக்டில் வேலை செய்து வரும் சிந்தாதிரிப்பேட்டையைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு(62). இவர் வழக்கம்போல் பணியை முடித்துவிட்டு வீட்டிற்கு கிளம்பி உள்ளார்.
அப்போது, மருத்துவமனை டவர் 2, மூன்றாவது மாடியில் இருந்து ஏசி கழண்டு விழுந்து திருநாவுக்கரசு தலையில் விழுந்துள்ளது. அதில் தலையில் பலமாக அடிபட்டதால் த்த வெள்ளத்தில் துடித்துடித்த அவரை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர்.
ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
தொடர்ந்து இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.