சென்னையில் நள்ளிரவு முதல் இடியுடன் கூடிய பலத்த மழை - பொதுமக்கள் மகிழ்ச்சி!
chennai
heavy rain
By Anupriyamkumaresan
சென்னையில் பல இடங்களில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
சென்னை அண்ணா சாலை, நுங்கம்பாக்கம், சேத்துப்பட்டு, திருவான்மியூர், அடையாறு வளசரவாக்கம், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் நள்ளிரவு ஒரு மணியளவில் தொடங்கிய மழை அதிகாலை வரை நீடித்தது.
சென்னையில் கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்த நிலையில், நேற்று பெய்த இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. இதனால் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.