அடுத்த 2 மணி நேரத்தில் இந்த மாவட்டங்களில் மழை பெய்யும் - சென்னை ஆய்வு மையம் தகவல்
தென் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு - நாளை கடலோர மாவட்டங்கள், புதுவை, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும்.
அதன்படி சென்னையில் இன்று காலை முதல் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் வேப்பேரி, பெரியமேடு, மெரினா, மந்தவெளி, கோடம்பாக்கம் ,கேகே நகர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இன்று காலை முதல் திடீரென மழை பெய்து வருகின்றது.
அத்துடன் சென்னை, செங்கல்பட்டு ,திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.