வினோத முறையில் சுய இன்பம் - கழிவறையில் பிணமாக கிடந்த பேராசிரியர்
வினோத முறையில் சுய இன்பம் காண ஆசைப்பட்ட நபர் உயிரிழந்துள்ளார்.
துணைப் பேராசிரியர்
உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரகார்குமார் கார்வர்(32) என்பவர் சென்னை மதுரவாயலில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
பிரகார்குமார் கார்வர் குன்றத்தூரில் உள்ள தனியார் கல்லூரியில் துணைப் பேராசிரியராக பணியாற்றி வந்தார்.
கழிவறையில் சடலம்
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அவரது மனைவி ஹகன்ஷா செல்போனில் தனது கணவருக்கு தொடர்பு கொண்டுள்ளார். ஆனால் நீண்ட நேரமாக போனை எடுக்காத நிலையில் அவருடன் பணிபுரியும் சோனி என்பவருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து அவர் மதுரவாயல் காவல்துறையினருக்கு தகவல்அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், வீடு பூட்டிக் கிடந்ததால், ஜன்னல் வழியே எட்டி பார்த்துள்ளார். அப்போது கர்வார், முகத்தில் பிளாஸ்டிக் கவர் சுற்றிய நிலையில் கழிவறையில் இறந்து கிடந்துள்ளார்.
சுய இன்பம்
இதன் பின்னர் அவரது சடலத்தை மீட்ட காவல்துறையினர், பிரேதப் பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேதப் பரிசோதனை முடிவில், அதிக உணர்ச்சிகளுக்காக முகத்தில் பாலிதீன் கவரைச் சுற்றியபடி சுய இன்பம் அனுபவித்ததாகவும், இதனால் மூச்சுத் திணறி இறந்துள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
அவரது வீட்டு பால்கனியின் பின்பக்க கதவு திறந்திருந்த நிலையில் இவரை கொலை செய்துவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றார்களா அல்லது வேறு மாத்திரை ஏதும் உட்கொண்டாரா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.