சிறந்த கல்லூரிகளின் பட்டியல் - சென்னை ஐஐடி முதலிடம்!

Tamil nadu Chennai
By Sumathi Jul 15, 2022 10:37 AM GMT
Report

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது. சிறந்த கல்லூரிகளுக்கான பட்டியலில் 3 தமிழக கல்லூரிகள் இடம் பெற்றுள்ளன.

சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியல்

ஆண்டுதோறும் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான ‛டாப் 10' பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டு வருகிறது.

சிறந்த கல்லூரிகளின் பட்டியல் - சென்னை ஐஐடி முதலிடம்! | Chennai Presidency College Third Place In Ranking

இன்று 2021-ம் ஆண்டுக்கான பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இன்று வெளியிட்டார்.

 சென்னை ஐஐடி முதலிடம்

நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடத்தை பெற்றுள்ளது.

சிறந்த கல்லூரிகளின் பட்டியல் - சென்னை ஐஐடி முதலிடம்! | Chennai Presidency College Third Place In Ranking

இரண்டாம் இடத்தில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் உள்ளது.

  பட்டியலில் 3 தமிழ் கல்லூரிகள்

இந்திய அளவில் சிறந்த கல்லூரிகளின் பட்டியலும் இன்று வெளியிடப்பட்டது. அதில் சென்னை மாநில கல்லூரி 3-ம் இடத்திலும், லயோலா கல்லூரி 4-ம் இடத்திலும், கிருஷ்ணம்மாள் கல்லூரி 6-வது இடத்திலும் உள்ளன.