உலகிலேயே முதல்முறை.. தண்டவாளங்கள் 5 ஆனால் தூண் 1 - சென்னை மெட்ரோவில் அசத்தல்!
சென்னை மெட்ரோ புதிய முயற்சி ஒன்றை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சென்னை மெட்ரோ
சென்னையின் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில்களின் இரண்டாம் கட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முதல் திட்டமாக பூவிருந்தவல்லி புறவழிச் சாலையிலிருந்து வடபழனி வரை 15 கிலோமீட்டர் தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.
இதில், ஆற்காடு சாலைப் பகுதியில் சுரங்கப் பாதை மூலம் திட்டத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. அதற்கு 5 ஆயிரம் கோடி ரூபாய் கூடுதல் நிதி சுமை ஏற்படும் என்பதால், குறுகிய பாதையான வடபழனி முதல் போரூர் வரை உள்ள 4 கிலோமீட்டர் தொலைவுக்கு ஒரே தூணில் நான்கு ரயில்கள் வந்துசெல்லவும்,
புதிய முயற்சி
ரயில்கள் இடமாற்றிக் கொள்ளவும் ஒரு லூப் லைனும் சேர்த்து 5 தண்டவாளங்கள் இரட்டை அடுக்குகளாக அமைக்கப்படுகின்றன. இந்த எடையைத் தாங்கும் வகையில், 75 மீட்டர் அளவுக்கு பூமியில் புதைக்கப்பட்டு தூண்கள் அமைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குநர் அர்ச்சுனன் பேசுகையில், “இதில் மிக முக்கியமானது ஒரு மெட்ரோ ரயில் மேல் இன்னொரு மெட்ரோ ரயில். உலகத்திலேயே முதல்முறையாக நாம் தான் இப்படி கட்டுகிறோம்.
இதில் மிகப்பெரிய சவால் ஆற்காடு ரோடில், 4 கி.மீ-க்கு 4 ரயில் நிலையங்கள் கொண்ட நீளமான பாதை அமைப்பதுதான்.” எனத் தெரிவித்துள்ளார்.