துப்பாக்கியை காட்டி மிரட்டி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த எஸ்.ஐ. அதிரடி கைது! தாய் உடந்தை.. தந்தை அதிர்ச்சி!
சென்னையில் 15 வயது சிறுமிக்கு துப்பாக்கியை காட்டி மிரட்டி பாலியல் தொல்லை அளித்த காவல் உதவி ஆய்வாளர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை மாதாவரம் பால்பண்ணை பகுதிக்கு கொரோனா பாதுகாப்புப் பணிக்காக சென்ற எஸ்.ஐ. சதீஷ்குமாருக்கும், அதே பகுதியில் உள்ள அருள் நகர் நியாயவிலைக்கடையில் பணிபுரிந்த பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இருவருக்கும் வெவ்வேறுவருடன் திருமணமான நிலையில், காலப்போக்கில் அது கள்ள காதலாக மாறி, இருவரும் ஒருவருட காலமாக தனிமையில் உல்லசமாக இருந்துவந்துள்ளனர்.
ஒரு நாள் வழக்கம்போல மணலி பகுதியில் அந்த பெண்ணின் வீட்டில் இருவரும் தனிமையில் இருந்ததை, பள்ளிக்குச் சென்றுவந்த அந்த பெண்ணின் 15 மகள் பார்த்துள்ளார்.
பின்னர் இதை அப்பாவிடம் சொல்லிவிட போவதாக கூறியுள்ளார். இதனால் பயந்து போன எஸ்.ஐ. சதீஷ் குமார் இதைப் பற்றி உன் அப்பாவிடம் நீ சொன்னால், உன் அப்பாவும் உன் தம்பியும் உயிரோடு இருக்க மாட்டாங்க , துப்பாக்கியால் சுட்டு கொன்றுவிடுவேன் என துப்பாக்கியை காட்டி மிரட்டியுள்ளார்.
அந்த 15வயது மகளோ பயத்தில் எதையுமே தன் அப்பாவிடம் சொல்லாமல் மறைத்துவந்துள்ளார். இதிலிருந்து சுதந்திரமாக வீட்டிற்கு வருவதும் போவதுமாய் இருந்துள்ளார் சதீஷ் .
அதுவரையிலும் தாய் மீது மட்டுமே இருந்த பார்வை, திடீரென 15வயது மகளின் பக்கம் திசை திரும்பி, சிறுமியின் தாயிடம் உனக்கு தற்போது இருக்கும் வசதியைவிட இன்னும் உச்சத்திற்குக் கொண்டு செல்கிறேன். ஆனால் நீ எனக்கு ஒரு விஷயத்தைச் செய்ய வேண்டும் என்று கேட்டுவிட்டு, உன் மகளை எனக்குப் பிடித்துள்ளது. அவளுடைய அனைத்து தேவைகளையும் நான் பார்த்துக்கொள்கிறேன். நீ சரி என்று சொன்னால் மட்டும் போதும் என்று கூறியுள்ளார்.
இதனால் சொகுசு வாழ்க்கைக்கு மயங்கிய தாயோ மகளை தாரை வார்க்க முடிவு செய்து/ அவருக்கு சம்மதம் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மகளின் பக்கம் திசை திரும்பிய சதீஷ், சிறுமியின் பிறந்தநாளன்று நள்ளிரவு கேக் வாங்கி சென்று வெட்ட சொல்லியுள்ளார்.
இதனை கண்ட சிறுமியின் தந்தை நள்ளிரவில் பெண் பிள்ளை இருக்கும் வீட்டிற்கு வரவேண்டாம் என்று எஸ்.ஐயிடம் சண்டை போட்டுள்ளார். இதனை தொடர்ந்து உன் மகளோடு நான் இருக்க வேண்டும் என கூறி தாயிடம் 1 லட்ச ரூபாய் ரொக்கத்தையும் கையில் கொடுத்துள்ளார்.
பணத்தாசை பிடித்த அந்த தாயும், சிறுமியின் பெரியம்மாவும் சேர்ந்து சிறுமியை சதீஷுடன் செல்ல வற்புறுத்தியுள்ளனர். இதனை மறுத்ததால் சிறுமியிடம் கத்தியை காட்டி மிரட்டி உன்னை கொன்று விடுவேன் என கூறி பல முறை சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார்.
இதனை அறிந்த தந்தை மனம் தாங்காமல், மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதனை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், எஸ்.ஐ. சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தனர்.