விபத்தில் உயிரிழந்த மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுத பெற்றோர்

Accident Perungalathur Youngsters Death
By Thahir Sep 06, 2021 03:51 AM GMT
Report

பெருங்களத்துாரில் நடந்த சாலை விபத்தில் பலியான இளைஞர்களின் உடல்களை பார்த்து கண்ணீர் விட்டு பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறிய காட்சி அனைவரையும் நிலை குலைய செய்தது.

பொறியியல் பட்டதாரியான மேட்டூரை சேர்ந்த நவீன், ராஜஹாரீஸ், திருச்சியை சேர்ந்த அஜய், புதுக்கோட்டையை சேர்ந்த ராகுல், சென்னையை சேர்ந்த அரவிந்த் சங்கர் ஆகியோர் நண்பர்களை சந்திப்பதற்காக சென்னை வந்துள்ளனர்.

பின்னர் நண்பர்களுடன் குதூகலமாக வண்டலூர் வரை ஒரு ரவுண்ட் சென்று வரலாம் என அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். அப்போது பெருங்களத்தூர் தனியார் ஐடி நிறுவனத்தின் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக அடைாளம் தெரியாத வாகனம் ஒன்று கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

விபத்தில் உயிரிழந்த மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுத பெற்றோர் | Chennai Perungalathur Accident

இதில் நிலைத்தடுமாறிய கார், அங்கு இரும்பு கம்பிகள் ஏற்றி வைக்கப்பட்டிருந்த லாரி மீது மோதியது. இந்த கோர விபத்தில் லாரி அடியில் சிக்கிய கார் சுக்குநூறாக நொறிங்கி தரைமட்டமானது. 

இதில் காரில் பயணம் செய்த 5 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 

விபத்தில் உயிரிழந்த மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுத பெற்றோர் | Chennai Perungalathur Accident

இந்நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை பெற வந்த பெற்றோர்,உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கதறி அழுத காட்சிகள் அனைவரையும் உருகுலைய செய்தது.

விபத்தில் உயிரிழந்த மகன்களின் உடல்களை பார்த்து கதறி அழுத பெற்றோர் | Chennai Perungalathur Accident

ஒரே நேரத்தில் பொறியியல் பட்டதாரிகள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.