சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி!

army indian nehru stadium
By Jon Feb 14, 2021 06:51 AM GMT
Report

பிரதமர் மோடி இன்று 4486 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை தொடங்கிவைக்க சென்னை வந்துள்ளார் டெல்லியில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டு சென்னை வந்துள்ள பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கபட்டுள்ளது.

விமான நிலையத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் பிரதமர் மோடிக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார் ஐ.என்.எஸ். அடையாறு கடற்படை தளத்தில் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடியார், துணை முதல்வர் ஓபிஎஸ் வரவேற்கின்றனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலமாக அடையாறு ஐ.என்.எஸ். விமானப்படை தளத்திற்கு செல்ல உள்ளார் மோடி.

பின்னர் அங்கிருந்து கார் மூலமாக செண்ட்ரல் அருகே இருக்கும் நேரு உள்விளையாடு அரங்கத்திற்கு செல்ல உள்ளார்.