பொங்கல் விடுமுறை : நள்ளிரவு வரை மெட்ரோ சேவை
By Irumporai
பொங்கல் நாட்களான ஜனவரி 13 மற்றும் 14 தேதிகளில் சென்னை மெட்ரோ நள்ளிரவு 12 மணி வரை இயங்கும் என கூறப்பட்டுள்ளது.
மெட்ரோ சேவை நீடிப்பு
பொங்கல் விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளியூர் செல்லும் மக்களுக்கு ஏற்ற வகையில் பொங்கல் விடுமுறை முடிந்து ஊர் திரும்பும் மக்களுக்கு வசதியாகவும் சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது .

12 மணி வரை சேவை
அதன் படி வெளியூர் செல்வதற்கு ஏற்றதாக வரும் 13,14 ஆகிய தேதிகளில் நள்ளிரவு 12 மணி வரையிலும் , வெளியூரில் இருந்து சென்னை வருவதற்கு ஏற்றதாக ஜனவரி 18ஆம் தேதியில் அதிகாலை 4 மணி முதல் மெட்ரோ சேவை தொடங்கும் எனவும் மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.
வரலாற்றில் முதன்முறையாக - நாட்டில் நடந்த பாரிய மோசடி: 4 தனியார் வங்கி முகாமையாளர்களுக்கு விளக்கமறியல் IBC Tamil
சர்ச்சையைக் கிளப்பிய கஞ்சிப்பானி இம்ரானின் கைது விவகாரம் : பாதுகாப்பு பிரதியமைச்சரின் அறிவிப்பு IBC Tamil