சென்னையில் மேலும் 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் : பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது

chennaimetro metroservice thiruvottriyurtheradimetro vimconagarmetro
By Swetha Subash Mar 13, 2022 07:41 AM GMT
Report

சென்னையில் மேலும் இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வருவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்தது.

2015-ம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கப்பட்ட சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் பயணிகளுக்கான சேவை 7 ஆண்டுகளை பூர்த்தி செய்த நிலையில், பயண சேவையை தொடர்ந்து வெற்றிகரமாக நிறைவேற்றி வருகிறது மெட்ரோ நிறுவனம்.

சென்னையில் மேலும் 2 மெட்ரோ ரயில் நிலையங்கள் : பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது | Chennai Metro Service Extended With 2More Stations

இந்நிலையில், சென்னை மெட்ரோ ரயில் நீட்டிப்புத் திட்டத்தின் கீழ் வண்ணாரப்பேட்டை முதல் விம்கோ நகர் வரை பயணிகள் சேவை இயக்கப்பட்டு வருகிறது.

இந்த வழித்தடத்தில், திருவொற்றியூர் தேரடி மற்றும் விம்கோ நகர் பணிமனை ஆகிய மெட்ரோ ரயில் நிலையங்கள் இன்று முதல் பயன்பாட்டிற்கு வந்தன.

இந்த இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களிலும் இன்று முதல் மெட்ரோ ரயில்கள் நின்று செல்லும் எனவும்,

விம்கோ நகர் பணிமனை மெட்ரோ ரயில் நிலையத்தில் இந்த மாதம் மட்டும் பயணிகள் தங்கள் வாகனங்களை இலவசமாக நிறுத்திக் கொள்ளலாம் எனவும் மெட்ரோ நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து, இவ்விரண்டு நிறுத்தங்களிலும் இன்று காலை 7:00 மணி முதல் ரயில்கள் நின்று செல்கின்றன.