சென்னையில் மெட்ரோவில் செல்லும் போது இதை கேட்டால் நம்ப வேண்டாம் - மெட்ரோ கொடுத்த விளக்கம்
மோசடி நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மெட்ரோ நிர்வாகம் எச்சரிக்கை.
மெட்ரோ நிர்வாகம் அதிரடி பேச்சு
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பயணச்சீட்டு பரிசோதகர் என்ற பணியிடமே இல்லை என்று மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதாவது, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் பயண சீட்டு பரிசோதனை பணி என்பது இல்லை. பயண சீட்டு பரிசோதகர் என்ற பெயரில் செயல்படும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மோசடி நபர்கள் மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பயண அட்டைகள், டோக்கன்கள், கியூஆர் குறியீடு போன்றவை தானியங்கி கட்டண வசூல் மூலம் சரிபார்க்கப்படுகிறது.
தானியங்கி இயந்திரத்தால் மட்டுமே பரிசோதனை, வேறு எந்த வகையிலும் பரிசோதனை இல்லை. பயண சீட்டு பரிசோதகர் என கூறுபவர்கள் மீது மெட்ரோ நிலைய கட்டுப்பாட்டாளர்களிடம் புகார் அளிக்கலாம் எனவும் சென்னை மெட்ரோ நிர்வாகம் கூறியுள்ளது. சந்தேக நபர்கள் குறித்து போலீசில் புகார் அளிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Press Release - 03-03-2023 pic.twitter.com/PGYJ1i2CXy
— Chennai Metro Rail (@cmrlofficial) March 3, 2023