மெட்ரோ ரயில் பயண அட்டைகளின் செல்லுபடி காலம் நீட்டிப்பு! பயணிகள் மகிழ்ச்சி!
கொரோனா பொதுமுடக்க காலத்தில் பயன்படுத்தப்படாத சென்னை மெட்ரோ ரயில் பயண அட்டைகளின் செல்லுபடி காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இதனால், பேருந்துகள், மெட்ரோ ரயில்கள் உள்ளிட்ட அனைத்தும் இயங்க தடை செய்யப்பட்டது. இந்த நிலையில், மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய ஏராளமான பயணர்கள், மாதந்தோறும் பயண அட்டை வாங்குவது வழக்கம்.
இந்த பயண அட்டை உபயோகப்படுத்துவதற்கு முன்பாகவே ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதனால் பயணிகள் பயன்படுத்தாத பயண அட்டைகளில் உள்ள பயண எண்ணிக்கையை அதற்கு சமமாக செல்லுபடியாகும் காலத்தை மெட்ரோ நிறுவனம் நீட்டித்துள்ளது.
இதுகுறித்து அறிய பயணிகள் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களிலும் உள்ள வாடிக்கையாளர் சேவையை அணுகுமாறு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது