விபத்தில் சிக்கிய பிரியா; பதறிப்போய் வெளியேறிய மேயர் - என்ன நடந்தது?

Tamil nadu DMK Chennai Vellore Priya Rajan
By Sumathi Feb 24, 2024 03:08 AM GMT
Report

சென்னை மேயர் பிரியா சென்ற கார் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது.

மேயர் பிரியா 

சென்னை மாநகராட்சி மேயர் பிரியா வேலூரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தல் அறிக்கை கருத்து கேட்பு கூட்டத்திற்கு சென்று விட்டு காரில் சென்னை திரும்பிக் கொண்டிருந்தார்.

mayor priya

அப்போது, கார் பூந்தமல்லி நெடுஞ்சாலை, சென்னீர்குப்பம் மேம்பாலத்தில் இருந்து இறங்கியபோது முன்னாள் சென்ற கார் திடீரென பிரேக் அடித்து நின்றுள்ளது. உடனே, இவரது கார் வேகம் குறைக்கப்பட்ட நிலையில் பின்னால் வேகமாக வந்த லாரி, மேயர் காரின் பின்புறம் இடித்து தள்ளியதில் முன்னாள் சென்ற காரில் மோதி நின்றது.

அவர் கிட்ட மட்டும் பயம் தான் - மேயர் பிரியா ஓபன் டாக்

அவர் கிட்ட மட்டும் பயம் தான் - மேயர் பிரியா ஓபன் டாக்

கார் விபத்து

இதில் இரண்டு வாகனங்களுக்கு இடையே மேயர் பிரியாவின் கார் சிக்கிக்கொண்டது. ஓட்டுநருக்கு மட்டும் லேசான காயம் ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக மேயர் பிரியா காயங்கள் இன்றி தப்பினார். அதன்பின், பிரியா இறங்கி சேதமடைந்த காரை பார்த்துள்ளார். பணியில் இருந்த போக்குவரத்துக் காவலர்கள், நிகழ்விடத்திற்கு வந்து விபத்து குறித்து லாரி ஓட்டுநரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

விபத்தில் சிக்கிய பிரியா; பதறிப்போய் வெளியேறிய மேயர் - என்ன நடந்தது? | Chennai Mayor Priyas Car Hit By A Lorry Accident

அதனையடுத்து, அவ்வழியாக வந்த பூந்தமல்லி எம்எல்ஏ கிருஷ்ணசாமிக்கு சொந்தமான காரில் ஏறி வீட்டிற்குச் சென்றார். தற்போது, போலீஸார் விபத்திற்குள்ளான லாரி மற்றும் காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.