சென்னை மாநகராட்சி மேயராக போட்டியின்றி தேர்வானார் திமுக வேட்பாளர் ஆர்.பிரியா
தமிழகம் முழுவதும் இன்று மாநகராட்சி மேயர் மற்றும் துணை மேயர் பதவிகளுக்கான தேர்தல் நடைபெற்று வருகிறது.
இதனிடையே சென்னை மாநகரட்சியின் மேயர் பதவிக்கு பிரியா ராஜன் போட்டியிடுவதாக தி.மு.க அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட்டது.
28 வயதான பிரியா ராஜன் சென்னை பல்கலைக்கழகத்தில் எம்.காம் படித்துள்ளார். சென்னை மாநகராட்சியின் 74-வது வார்டில் போட்டியிட்டார் பிரியா.தன்னை எதிர்த்து போட்டியிட்டவர்களை விட 6,299 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.
இந்நிலையில் சென்னை மாநகராட்சியின் மேயர் பதவிக்கு பிரியா ராஜன் போட்டியிடுவார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதையடுத்து சென்னை ரிப்பன் மாளிகைக்கு வந்த ஆர்.பிரியா ராஜன் போட்டியின்றி தேர்தெடுக்கப்பட்டார். இதையடுத்து அவருக்கு சென்னை மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
பின்னர் அவருக்கு மேயர் ஆடைகளை வழங்கினார் ககன் தீப் சிங் பேடி. இதையடுத்து அவருக்கு அமைச்சர் சேகர்பாபு,மா.சுப்பிரமணியன் பொன்னாடை செலுத்தி வாழ்த்து தெரிவித்தனர்.
சென்னை மாநகராட்சின் முதல் பட்டியலின மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார் ஆர்.பிரியா ராஜன்.
You May Like This