மனைவியை ஆபாச படம் எடுத்து கணவனே மிரட்டிய கொடூரம்!
சென்னை மன்னடியை சேர்ந்த ஜெயப்பிரகாஷ் கொரியர் சர்வீஸ் கடையை நடத்தி வருகிறார். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பாக ரூபாவதி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவர்களது மகன் தற்போது கல்லூரியில் படித்து வருகிறார். இந்த நிலையில் ஜெயப்பிரகாஷ் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.
அதில், முத்தியால்பேட்டை காவல்நிலையத்தில் பணிபுரியும் காவலர் பெஞ்சமின் பிராங்கிளின் தன் மனைவியோடு கள்ளத்தொடர்பில் இருப்பதாகவும், தன் மனைவியை ஆபாச படங்கள், வீடியோக்கள் எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி பணம் கேட்பதாகவும் கூறியிருந்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசாரிடம், மனைவி ஒரு பரபரப்பு புகாரை கூறியுள்ளார். அதில் என் கணவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்றும், தொடர்ந்து என்னை கொடுமைப்படுத்தி வருவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
மேலும், என் பெயரில் உள்ள ஒரு கோடி ரூபாய் சொத்தை அபகரிக்கவே இப்படி அவதூறு கருத்துகளை பரப்பி வருவதாகவும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து கள்ளக்காதல் குறித்து விசாரித்த போது, அவருடன் இருந்த உறவு 5 வருடங்களுக்கு முன்பே முடிந்து போன விஷயம் என்றும், சொத்து பறிப்போய்விடுமோ என்ற பயத்தில் என் ஆபாச படங்களை அவரே வெளியிட்டு இப்படி செய்துவருவதாக கூறியுள்ளார்.
புகாரை தெரிவித்துவிட்டு, உறவு முடிந்ததாக கூறிய காவலரோடு பைக்கில் ஏறி சென்றதை கண்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர்.