நான் கராத்தே பயிற்சியில் சேர்ந்தபோது என்னை சோர்வடையாமல் வைத்தது மாட்டு கறிதான்: சீமான் சிறப்பு பகிர்வு!

seaman eatbeef MadrasDay2021
By Irumporai Aug 22, 2021 04:31 PM GMT
Report

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், சென்னை தினத்தையொட்டி நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்

கல்லூரிப் படிப்பை முடிச்சதும் சினிமா ஆசையில் 20 வயசுல சென்னைக்கு பஸ் ஏறி வந்துட்டேன். சென்னைக்கு வந்து முப்பது வருடங்கள் ஓடிவிட்டன என கூறிய சீமான்.

சென்னையின் உணவு முறை குறித்து கூறினார், அதில்சென்னைக்கு நான் கிளம்பியபோது, மாட்டுக்கறி மட்டும் சாப்பிடக்கூடாது. மாடு நமக்கு தெய்வம். அதனால மாட்டுக்கறி சாப்பிடக்கூடாது. இந்த ஒரே ஒரு விஷயத்த மட்டும் பண்ணிடாதப்பா என்று என்கிட்ட சத்தியம் வாங்கினார் அப்பா.

நான் கராத்தே பயிற்சியில் சேர்ந்தபோது  என்னை சோர்வடையாமல் வைத்தது மாட்டு கறிதான்: சீமான் சிறப்பு பகிர்வு! | Chennai Made Me Eat Beef Seaman Special Sharing

ஆனால் அந்த சத்தியத்தை இன்னைக்கு வரைக்கும் என்னால காப்பத்த முடியல . மாமாவுக்கு செய்த சத்தியத்தை காப்பற்றவாவது மாட்டுக்கறியை சாப்பிடாமல் இருங்களேன் என்று சொல்வார் மனைவி.

மாட்டுக்கறியில்தான் அதிக புரதம் இருக்கிறது. அதனால்தான் சாப்பிடுகிறேன் என்று சொல்லிவிடுவேன். அன்றைய காலகட்டத்தில் குறைந்த விலையில் ஒரு ரூபாய்க்கு கிடைத்தது மாட்டுக்கறி.

என் கையில் பணமில்லாத அந்த காலத்துல ஒரு ரூபாய்க்கு மாட்டுக்கறி வாங்கி சாப்பிடுவேன். மாட்டுக்கறி சாப்பிட்டால் அடுத்த நாளைக்கும் அது எனர்ஜி யோடு இருக்க வைக்கும்.

ஒரு நாள் மாட்டுக்கறி சாப்பிட்டா அடுத்த ரெண்டு மூணு நாளைக்கு பசி தாங்க முடியும். நாளைக்கு கராத்தே போட்டி என்றால் முதல் நாளே ஒரு கிலோ மாட்டுகறி சாப்பிடுவோம்  என கூறியுள்ள சீமான்,இத்தனை அதிகம் புரத சத்து உள்ள அதை சாப்பிடுவதற்கு தான் சமூகத்தில் எதிர்ப்பு உள்ளதாக கூறினார்

அதேசமயம், சென்னையில் குடியேறினாலும் எனது மனது முழுக்க கிராமத்தில்தான் இருக்கும். 'உன் வாழ்க்கை 40 வயதுவரை ரொம்பக் கஷ்டமா இருக்கும்ப்பா. அதுக்கப்புறம், அதுவே பழகிடும்ப்பா' என்பார்களே. அப்படித்தான், சென்னை வாழ்க்கை தனக்கு பழகிவிட்டதாக சீமான், சென்னை தினத்தையொட்டி நினைவலைகளை பகிர்ந்துகொண்டார்.