சென்னையில் மீண்டும் லாக்டவுன் - வெளியான முக்கிய தகவல்

Corona Lockdown Chennai
By Thahir Sep 15, 2021 02:34 AM GMT
Report

சென்னையில் கொரோனா இரண்டாவது அலை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு பொதுமக்கள் இயவ்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர்.

தமிழகத்தில் சென்னையில் குறைந்து, கோவையில் தினசரி பாதிப்பு அதிகரித்துள்ளது. தொற்று பாதிப்பு குறைந்ததையடுத்து திரையரங்குகள், பூங்காக்கள் உள்ளிட்டவையும் பல மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டுள்ளன.

சென்னையில் மீண்டும் லாக்டவுன் - வெளியான முக்கிய தகவல் | Chennai Lockdown Corona

தற்போது சென்னை மாவட்டத்தில் அன்றாடம் சராசரியாக 150 முதல் 200 பேர் வரை புதிதாக தொற்றுக்கு ஆளாகி வருகின்றனர்.

செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் கொரோனா 3ஆவது அலை பரவ வாய்ப்புள்ளதாக ஏற்கனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதேநேரத்தில் சென்னையில், கொரோனா ஏற்ற, இறக்கம் காட்டி வருவது மூன்றாவது அலைக்கு வழி வகுத்து விடுமோ என்ற அச்சத்தை பலதரப்பினர் மத்தியிலும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த அச்சத்தை போக்கு விதத்திலும், கொரோனா மூன்றாவது அலையை தடுக்கும் நோக்கிலும் தி.நகர், காசிமேடு மீன் மார்க்கெட் போன்ற மக்கள் அதிகம் கூடும் இடங்களில் வார இறுதி நாட்களில் கூடுதல் கட்டுப்பாடுகளை கொண்டு வரவும், தேவைப்பட்டால் குறிப்பிட்ட இடங்களில் மட்டும் லாக்டவுனை செயல்படுத்தவும் சென்னை மாநகராட்சி நிர்வாகம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னையில் மீண்டும் லாக்டவுன் - வெளியான முக்கிய தகவல் | Chennai Lockdown Corona

குறிப்பாக, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் குடும்ப தொற்று அதிக அளவில் கண்டறியப்பட்டு வருகிறது. அதாவது ஒரு குடும்பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டால் அந்த குடும்பத்தில் மூன்று பேர் வரை தொற்றுக்கு ஆளாகின்றனர்.

எனவே பொதுமக்கள் வெளியே செல்லும்போது தங்கள் குடும்ப உறுப்பினர்களின் நலனை கருத்தில் கொண்டு, கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

சென்னையில் நாள்தோறும் சராசரியாக 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்படுகிறது.

இதில் ஏற்ற, இறக்கத்துடன் தான் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. ஒரு தெருவில் மூன்று பேருக்கு மேல் தொற்றால் பாதிக்கப்பட்டால் அது கட்டுப்பாட்டு பகுதியாக அறிவிக்கப்படுகிறது.

இதன்படி மாநகரில் தற்போது 99 தெருக்கள் கட்டுப்பாட்டு பகுதியாக உள்ளன' என்று மாநகராட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.