நூலிழையில் உயிர் தப்பிய நபர் - கொரட்டூரில் மரம் வேரோடு சரிந்து விழுந்த CCTV காட்சி..!

Chennai
By Nandhini Nov 02, 2022 10:59 AM GMT
Report

சென்னை கொரட்டூரில் மரம் வேரோடு சரிந்து விழுந்த போது இருசக்கர வாகனத்தில் சென்றவர் நுாலிழையில் உயிர் தப்பினார்.

20 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு

வடகிழக்கு பருவ மழை தொடங்கியுள்ளது தமிழகத்தில் விடிய விடிய கனமழை பெய்து வருகிறது. இதனையடுத்து, தமிழகத்தில் 20 மாவட்டங்களில் அடுத்த 4 நாட்களுக்கு தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

சிரமப்படும் வாகன ஓட்டிகள்

நேற்று முன்தினம் இரவிலிருந்து சென்னையில் பெய்து வரும் மழையால் பல பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளது. வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் சென்னை மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. வாகன ஓட்டிகள் வெள்ள நீரில் வாகனத்தை இயக்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.

chennai-korattur-cctv-footage-a-tree-uprooted

ஒரு நொடியில் உயிர் தப்பிய நபர்

தற்போது சமூகவலைத்தளங்களில் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது.

அந்த வீடியோவில், விடாமல் பெய்து வரும் மழையால் நேற்று சென்னை, கொரட்டூரில் ஒரு மரம் வேரோடு சரிந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக வாகனத்தில் சென்றவரும், மரத்தின் அருகில் நின்றுக்கொண்டிருந்தவர்கள் ஒரு நொடியில் உயிர் தப்பினர். 

தற்போது இது தொடர்பான சிசிடிவி காட்சி இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.