தொடரும் கனமழை - மின்சாரம் தாக்கி துடிதுடித்து உயிரிழந்த மாடு: பொதுமக்கள் கண்ணீர்
சென்னை ஜாபர்கன்பேட்டையில் மின்சாரம் தாக்கி பசு மாடு ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.
சென்னை மாவட்டத்தில் மட்டும் தொடர்ந்து 3வது நாளாக கனமழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது.
இதனால் பொதுமக்கள் மட்டுமின்றி அப்பகுதியில் உள்ள நாய்கள், மாடுகள் என அனைவரும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். அந்த வகையில் சென்னை ஜாபர்கான்பேட்டையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது.
மேலும், அப்பகுதியில் உள்ள மின்சார கம்பங்கள் சாய்ந்த நிலையில் காணப்படுகின்றன. இந்த நிலையில், அப்பகுதியில் நடந்து கொண்டிருந்த மாடு மீது மின்சாரம் தாக்கியதில், அந்த மாடு சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்துள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.