மக்கள் வாழ தகுதியற்ற மாநகரம் சென்னை..இதுதான் திமுக திட்டமா? - அன்புமணி கண்டனம்!

Anbumani Ramadoss Tamil nadu DMK PMK Chennai
By Swetha Jul 31, 2024 07:45 AM GMT
Report

தொழில் வரி 35% , உரிமைக் கட்டணம் 100% வரை உயர்த்தப்பட்டதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அன்புமணி கண்டனம்

இது தொடர்பாக அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சென்னையில் மாத வருமானம் ரூ.60 ஆயிரத்துக்கும் குறைவாக ஈட்டுவோரிடம் வசூலிக்கப்படும் தொழில் வரியை 35% வரையிலும், சிறிய அளவிலான கடைகள் நடத்துவதற்கான வணிக உரிமக் கட்டணத்தை 100%,

மக்கள் வாழ தகுதியற்ற மாநகரம் சென்னை..இதுதான் திமுக திட்டமா? - அன்புமணி கண்டனம்! | Chennai Is Unfit City For People To Live Anbumani

வரையிலும் உயர்த்தி மாநகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஏழை மற்றும் நடுத்தர மக்களை மிகக் கடுமையாக பாதிக்கும் இந்த வரி மற்றும் கட்டண உயர்வு கடுமையாக கண்டிக்கத்தக்கது.

மாத வருமானம் ரூ.21 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரை உள்ள பணியாளர்களுக்கான தொழில் வரியை 35% வரை உயர்த்தியுள்ள சென்னை மாநகராட்சி, அதற்கும் கூடுதலாக ஊதியம் பெறுவோருக்கான தொழில்வரியை உயர்த்தவில்லை.

சமஸ்கிருதத்தை தமிழக அரசே திணிப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

சமஸ்கிருதத்தை தமிழக அரசே திணிப்பதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

தகுதியற்ற மாநகரம்

அதேபோல், பெரிய அளவிலான நிறுவனங்களுக்கு சலுகைகளை வாரி இறைக்கும் சென்னை மாநகராட்சி, தேநீர்க் கடைகள், மருந்துக் கடைகள், முடி திருத்தும் கடைகள் போன்றவற்றுக்கான உரிமத் தொகையை ரூ.10 ஆயிரம் ஆகவும்,

மக்கள் வாழ தகுதியற்ற மாநகரம் சென்னை..இதுதான் திமுக திட்டமா? - அன்புமணி கண்டனம்! | Chennai Is Unfit City For People To Live Anbumani

வேறு சில கடைகளுக்கான உரிமத் தொகையை ரூ.30 ஆயிரமாகவும் உயர்த்தியிருப்பதை ஏற்றுக் கொள்ளவே முடியாது. வாழ்வாதாரம் தேடி சிறியகடைகள் நடத்துவோரிடம் கூட இந்த அளவுக்கு கட்டணக் கொள்ளை நடத்துவதை மன்னிக்கவே முடியாது.

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அண்மையில் தான் 175% வரை சொத்துவரி உயர்த்தப்பட்டது. ஆனால், மாநகர மக்களுக்கு எந்த அடிப்படை வசதியும் செய்து தரப்படுவதில்லை.

திமுக திட்டமா?

2500 சதுர அடிக்கும் குறைவான பரப்பளவில் வீடுகளை கட்ட விரும்புவோர் ஆன்லைனில் விண்ணப்பித்து அனுமதி பெறும் திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. பொதுமக்களுக்கு சலுகை வழங்குவதாகக் கூறி அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டத்தின்படி 1000 சதுர அடியில் வீடு கட்டுவதற்கான கட்டணம் ரூ. 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

மக்கள் வாழ தகுதியற்ற மாநகரம் சென்னை..இதுதான் திமுக திட்டமா? - அன்புமணி கண்டனம்! | Chennai Is Unfit City For People To Live Anbumani

இதனால் ஏற்படும் பயன்களை விட பாதிப்புகளே அதிகம். சென்னையில் ஏழைகளோ, நடுத்தர மக்களோ வாழவே கூடாது என்ற எண்ணத்துடன் அவர்கள் மீது தமிழக அரசும், சென்னை மாநகராட்சியும் வரி உயர்வு மற்றும் கட்டண உயர்வுகளை சுமத்தி வருவது மனிதத்தன்மையற்ற செயலாகும்.

ஆட்சிக்கு வந்து விட்டோம், இனி மக்களின் தயவு தேவையில்லை என்ற அதிகார மமதையுடன் செயல்படும் திமுகவுக்கு மக்கள் விரைவில் சரியான பாடம் புகட்டுவார்கள்.” என்று தெரிவித்துள்ளார்.