சென்னையில் சோகம்.. இரும்பு கேட் விழுந்து அதிகாரிகள் பலி!

death chennai gatefalls
By Irumporai May 18, 2021 02:13 PM GMT
Report

 சென்னை ஐ.சி.எப்.பில் 15 அடி உயர நுழவைாயில் இரும்பு கேட் விழுந்து ரயில்வே காவலர் மற்றும் ஐசிஎப் அதிகாரி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை ஐ.சி.எப் வளாகத்தில் நேற்று மாலை 7 மணி அளவில் லோடு இறக்கி விட்டு வாகனம் திரும்பி சென்றது.

அப்போது நுழைவுவாயில் கேட்டை முடியபோது, கேட்டின் அடிப்பகுதியில் பழுது இருந்ததால் திடீரென கீழே விழுந்தது.

அப்போது, கேட்டின் அருகே நின்று கொண்டிருந்த இன்ஜினியர் நற்குணன் (55) மற்றும் ஆர்.பி.எப் காவலர் லட்சுமணன் (41) ஆகியோர் அதில் சிக்கி படுகயாமடைந்தனர்.

சென்னையில் சோகம்.. இரும்பு கேட் விழுந்து அதிகாரிகள் பலி! | Chennai Iron Gate Falls Officials Killed

   அவர்களது அலறல் சத்தம் கேட்டு  ஓடி வந்த சக ஊழியர்கள் படுகாயமடைந்த இருவரையும் மீட்டு ஐசிஎப் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

ஆனால், வழியிலேயே நற்குணன் இறந்தார். ரயில்வே காவலர் லட்சுமணன் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.