ஐ.ஐ.டியில் தொடரும் தற்கொலை : பரபரப்பில் கல்லுரி நிர்வாகம்
ஐ.ஐ.டியில் மேலும் ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதிகரிக்கும் தற்கொலை
நாடு முழுவதும் உள்ள ஐஐடி ஐ.ஐ.எம் போன்ற பெரும் கல்வி நிறுவனங்களில் தற்போது மாணவர்கள் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் அதிகரித்துள்ளது. அந்தவகையில் கடந்த பிப்ரவரி மாதம் சென்னை ஐ.ஐ.டியில் பயின்ற மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஸ்டீபன் சன்னி ஆல்பர்ட் என்ற விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
பரபரப்பில் ஐஐடி
அவர் சென்னை ஐ.ஐ.டியில் ஆராய்ச்சி மாணவராக பயின்று வந்தார். அதேநேரத்தில் மற்றொரு மாணவரும் மாத்திரைகளை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றார். இந்த பரபரப்பு அடங்குவதற்கு முன்னதாக தற்போது சென்னை ஐ.ஐ.டி மாணவர் ஒருவர் விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
ஐ.ஐடியில் தற்கொலை செய்துகொள்ளும் மாணவர்கள் பெரும்பாலும் பிற்படுத்தப்பட்டவர்களாகவும் ,பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்களாகவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.