Sunday, Jul 13, 2025

சென்னை ஐஐடி மாணவி வன்கொடுமை : முன்னாள் மாணவர் கைது

chennai IITMadras
By Irumporai 3 years ago
Report

சென்னை ஐஐடியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக முன்னாள் மாணவர் கைது செய்யப்பட்டார். கடந்த 2017-ஆம் ஆண்டு சென்னை ஐஐடியில் மேற்குவங்கத்தை சார்ந்த தலித் மாணவி மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.

அதில், தன்னுடன் பயின்ற ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்தார். அந்த புகாரின் அடைப்படையில் பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 8 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் எந்தவிதமான நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை என மாதர் சங்கம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இதனால், 8 பேரை கைது செய்ய போலீசார் தனிப்படை அமைத்தனர்.

இந்த தனிப்படை நேற்று இரவு மேற்குவங்கம் சென்று சென்னை ஐஐடி முன்னாள் ஆராய்ச்சி மாணவர் கிங்சோ தெப்சர்மாவை கொல்கத்தாவில் கைது செய்தனர். டைமண்ட் ஹார்பர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ள கிங்சோ தெப்சர்மா தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

போக்குவரத்து வாரண்ட் பெற்ற பின் கிங்சோ தெப்சர்மாவை போலீசார் சென்னை அழைத்து வர உள்ளனர்.